2025 ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் வரலாற்றில் இப்போதைய நிலவரப்படி அதிக லாபம் பெற்ற படமாக, தமிழில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ அடையாளம் காணப்பட்டுள்ளது.மிகச் சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் இத்தகைய சாதனையை, குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த குடும்பத் திரைப்படம் படைத்துள்ளது.
சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம், வெறும் 7 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டது.ஆனால், உலகம் முழுவதும் 90 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.இது சுமார் 1200% லாபம் என்பதால், இந்திய சினிமா வரலாற்றில் மிக அதிக லாபம் பெற்ற படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
திரைப்பட வர்த்தக தகவல்களை கண்காணிக்கும் சாக்நில்க் நிறுவனம், “2025ஆம் ஆண்டு வரை எந்த ஒரு இந்திய படமும் இந்த அளவிலான லாபத்தை அடைந்ததில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இது குறைந்தபட்ச முதலீட்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய ரீதியில் ஒரு ரெக்கார்டு வெற்றி என சினிமா வட்டாரங்கள் பார்க்கின்றன.
பெரும் பட்ஜெட், பிரம்மாண்ட காட்சிகள், பிஆர் செலவுகள் ஆகியவை இல்லாமல் — குடும்பம், நகைச்சுவை, உணர்ச்சி கலந்த நச்சென ஓடும் திரைக்கதை மூலம், ‘டூரிஸ்ட் பேமிலி’ ரசிகர்களின் இதயத்தை கைப்பற்றியுள்ளது.பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் வெற்றிபெறும் சிறந்த கதைதான் முதன்மை என்பதை ‘டூரிஸ்ட் பேமிலி’ மீண்டும் உறுதி செய்திருக்கிறது.
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி