1957-க்கு பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவலான 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணை 120 அடியைத் தொட்டு கடல் போல் காட்சி தருகிறது. காவிரி ஆற்றில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
ஜூன் மாதத்தில் அணை 120 அடியை எட்டுவது ஒரு அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இதற்கு முன்பு 1941, 1957 ஆகிய ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பிரமாண்ட அணைகளில் மேட்டூர் அணையும் ஒன்று
கட்டுமானப் பணிகள் தொடங்கியது: ஜூலை 20, 1925
செயல்பாட்டுக்கு வந்தது: ஆகஸ்ட் 21, 1934
மொத்த கொள்ளளவு: 95.63 டி.எம்.சி (95630 மில்லியன் கன அடி)
பயன்பாட்டுக்குரிய சேமிப்பு: 93.47 டி.எம்.சி (93470 மில்லியன் கன அடி)
அணை கட்டும் பணி தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, அதாவது 1924ம் ஆண்டு காவிரி ஆற்றில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. அப்போது விநாடிக்கு 4.56 லட்சம் கன அடி நீர் என்ற அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த அதீத வெள்ளப் பெருக்குதான் மேட்டூரில் அணை கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
அணை கட்டிய பிறகு பல பெரும் வெள்ளங்களை மேட்டூர் அணை சந்தித்துள்ளது. குறிப்பாக, 1961, 1977, 1981, 1989, 1991, 1993, 2005, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் முக்கியமான பல வெள்ளப் பெருக்குகளை மேட்டூர் அணை சந்தித்துள்ளது.
1934-ல் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, கடந்த 92 ஆண்டுகளில் 2025 உட்பட 44 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அதாவது கடந்த 25 ஆண்டுகளில் கணக்கெடுத்தால், 2013, 2018, 2019, 2021, 2022, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் முழுக் கொள்ளளவை அது எட்டியுள்ளது.