இலங்கையில் சுமார் 60% மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24% உயர் வகுப்பு மாணவர்கள் என இலங்கை குழந்தைகள் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
கல்வி அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், சமூக ஊடக பயன்பாடு , குழந்தை துஷ்பிரயோகம் ஆகியவை முக்கிய காரணங்கன் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.