Saturday, January 10, 2026 11:18 am
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைக்க சவூதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை கூடுதலாக 6 மில்லியன் அமெரிக்கடொலர் கிடைக்கும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க சவூதி மேம்பாட்டு நிதியத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த நிதி உறுதிப்படுத்தப்பட்டது.
சவூதி பிரதிநிதிகள் குழுவில் மூத்த நிபுணர் (கடன் செயல்பாடுகள்) முகமது அல்-மசூத், மூத்த கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சோகெய்ர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர் அடங்குவர். அமைச்சின் செயலாளர் டாக்டர் கபிலா பெரேரா ஆகியோர் கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.
இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகள், டித்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் பேரழிவை எதிர்கொள்ளும் அரசின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரத்நாயக்க, பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
சவூதி மேம்பாட்டு நிதியம் ஏற்கனவே இலங்கையில் வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டஒலரை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதலாக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சாலை உள்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஒதுக்கப்படும்.

