பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 500 கிலோகிராம் ஹெராயின், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) புத்தளத்தில் அழிக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளது.
நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோகிராம் ஹெராயின், புத்தளம், பாலவியவில் அமைந்துள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் எரிக்கப்பட உள்ளது.