Monday, February 9, 2026 6:46 pm
தமிழக அரசியல் களம் தேர்தல் கூட்டணிகளால் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக ,தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த கூட்டணியில், திமுக தரப்பு தேமுதிகவிற்கு மிகவும் கறாரான நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக தரப்பில் அதிக தொகுதிகள் , ஒரு ராஜ்ய சபா சீட் கோரப்பட்ட நிலையில், திமுக தலைமை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும், ராஜ்ய சபா சீட் பேச்சுக்கே இடமில்லை” என்று திமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தேமுதிகவிற்கு, திமுகவின் இந்த கறார் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் அடுத்தகட்டமாக அதிமுக பக்கம் திரும்புவாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

