2025 ஆம் ஆண்டில் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் , ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 100 க்கும் மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இவற்றில் 31 நேரடியாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவை, இதன் மூலம் 100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 41 துப்பாக்கிகள், 27 கைத்துப்பாக்கிகள் , 14 ரி-56 தாக்குதல் துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் என அவர் தெரிவித்துளார்.