Saturday, May 3, 2025 3:44 pm
உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

