Saturday, January 31, 2026 9:03 pm
பலுசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் இரண்டு தனித்தனி பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைந்தது 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கையின்படி, தீவிரவாதிகள் இருப்பது குறித்த உளவுத்துறை தகவல்களின் பேரில் வியாழக்கிழமை ஹர்னாய் ,பஞ்ச்கூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹர்னாய் மாவட்டத்தின் தீவ்விரவாதிகள் கொல்லப்பட்டனர். பஞ்ச்கூர் மாவட்டத்தில் ஒரு தனி நடவடிக்கையில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் வெடிபொருட்கள் என்பனவற்றை மீட்டதாக ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15, 2025 அன்று பஞ்ச்கூரில் நடந்த வங்கிக் கொள்ளையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது, பயங்கரவாதிகள் முன்பு பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஐஎஸ்பிஆர் தரவுகளின்படி, இந்த மாதம் கைபர் பக்துன்க்வா , பலுசிஸ்தான் ஆகியமாகாணங்களில் நடத்தப்பட்ட ஆறு வெவ்வேறு நடவடிக்கைகளில் மொத்தம் 79 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
