2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.2024 ஆம் ஆண்டு 6.51 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டளவில், 75 சதவீத தொழிலாளர்களை தொழில்முறை வேலைகளுக்கும், 25 சதவீத தொழிலாளர்களை குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்காக 15,900 பேரையும், ஜப்பான் வேலைவாய்ப்புக்காக 9,000 பேரையும் தென் கொரியாவிற்கு 8000 பேரையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி