Saturday, February 14, 2026 4:13 pm
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டதை விசாரிக்க நியமிக்கப்பட்ட நா பாராளுமன்ற சிறப்புக் குழுவிலிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா இராஜினாமா செய்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழு, இந்த விவகாரத்தை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக அதன் மூன்றாவது அமர்வுக்காக 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.
ஆரம்பத்தில், அமைச்சர் கருணாதிலகா குழுவிலிருந்து விலகியதாகவும், மாற்று உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வழங்க இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோடவும் பிற அதிகாரிககளும் குழுவின் முன் ஆஜரானனர்.
பிரதி அமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க, சுனில் வட்டகல , அர்காம் இலியாஸ் , பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, அஜித் பி. பெரேரா, டி.வி. சானக, முஜிபுர் ரகுமான், நஜித் இந்திக்க, லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

