Sunday, January 25, 2026 7:15 am
2025 ஆம் ஆண்டில் பல்வேறு சைபர் குற்றங்கள் தொடர்பாக 318 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த ஆண்டில் 2,000 க்கும் மேற்பட்ட சைபர் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP F.U. வூட்லர் தெரிவித்தார், டிஜிட்டல் துறையில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை இது டுத்துக்காட்டுகிறது.
சைபர் குற்றவாளிகள் முதன்மையாக இளைஞர்களையும், முதியவர்களையு குறிவைப்பதாகவும், சமீபத்தில் இணைய அணுகலைப் பெற்ற நபர்களும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் விழிப்புடனும், , ஒன்லைன் தளங்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். வலியுறுத்தினார், தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத தரப்பினருடன் கடவுச்சொற்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரக்கூடாது என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

