சமூக பராமரிப்பு நிலையங்கள் மூலம் திறமையான , உயர்தர ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் கிட்டத்தட்ட 10,000 மக்களுக்கு சேவை செய்யு முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,000 முதன்மை பராமரிப்பு சமூக நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு 100 நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மையத்திலும் எட்டு சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், மக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் உயர்தர ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதாகும், இது இறுதியில் முழு தீவுக்கும் பொருந்தும். முன்மொழியப்பட்ட ஆரம்ப பராமரிப்பு சமூக நிலயத்துட்டம் பற்றி பொது சுகாதார செவிலியர் அதிகாரிகளுக்கு (PHNOs) தெரிவிக்கும் பட்டறை சனிக்கிழமை (26) இலங்கை அறக்கட்டளை நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தப் பட்டறைக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமை தாங்கினார், அவர் இந்தத் திட்டம் நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும் என்றார்.