Monday, March 2, 2026 7:59 pm
திங்களன்று குவைத்தில் மூன்று அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதுக்கு , "நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு சம்பவம்" காரணம் என்று அமெரிக்க இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குவைத் வான் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை ET நேரப்படி F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்தினர். ஆறு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று CENTCOM தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக ஜெட் விமானங்கள் பறந்து கொண்டிருந்த போது நடைபெற்ற இந்தச் சம்பவம் ஒபரேஷன் எபிக் ஃப்யூரி என்று அழைக்கப்படுகிறது.

