Friday, January 30, 2026 9:00 pm
ராட் லேவர் அரங்கில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் 2026 ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் இரண்டாம் நிலை வீரர் ஜானிக் சின்னரை வீழ்த்தி தனது 38வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் .
நான்காவது நிலை வீரரான ஜோகோவிச் நான்கு மணி நேரம் ஒன்பது நிமிடங்களில் 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஞாயிற்றுக்கிழமை கார்லோஸ் அல்கராஸுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

