குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இலண்டனுக்கு காலை 11 மணிக்குப் புறப்பட்ட புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.