Sunday, January 25, 2026 7:50 am
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் சனிக்கிழமை 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான ஜப்பான் 4-0 என்ற கணக்கில் சீனாவை வென்று மீண்டும் சம்பியனானது.
முன்னதாக வெள்ளிக்கிழமை, நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில்120 நிமிடங்களில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்த பிறகு, பெனால்டி ஷூட் மூலம் தென் கொரியாவை 7-6 என்ற கணக்கில் வீழ்த்தி வியட்நாம் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

