219 மருந்து விற்பனை நிலையங்கலின் உரிமங்களை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMறா) இடைநிறுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக NMRA 2,039 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், 1,820 மருந்து விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிரந்தர மருந்தாளர்கள் இல்லாததால் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.