Friday, April 10, 2026 3:34 pm
உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிகளின் வடிவத்திலிருந்து மரதன்னைப் பிரித்து, 2030 முதல் ஒரு தனி உலக மரதன் சம்பியன்ஷிப் போட்டியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2027 ,2029 பஆம் ஆண்டுகளில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாகவே மரதன் இருக்கும்.ஆனால் 2030 முதல் அது ஒரு தனி சம்பியன்ஷிப் போட்டியாக மாற்றப்படும் என்று இந்த உலகளாவிய நிர்வாக அமைப்பு செவ்வாயன்று அறிவித்தது.
2031 முதல், உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிகளில் சாலை ஓட்டப் போட்டிகள் எதுவும் இடம்பெறாது. உலக மரதன் சம்பியன்ஷிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், . ஒரு மைல், 5 கிலோமீற்றர் மற்றும் அரை மரதன் தூரங்களை உள்ளடக்கிய உலக தடகள சாலை ஓட்டப் போட்டிகள், ஒரு தனி வருடாந்திர போட்டியாகத் தொடரும்.
உலக தடகள அமைப்பின்படி, 2030-ஆம் ஆண்டில் நடைபெறும் முதல் உலக மரதன் சம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதென்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

