Sunday, March 16, 2025 11:51 am
சிறுவர்கள் தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child Labor) இந்தவருடத்திற்கான முதலாவது கூட்டம் நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த தேசிய செயற்குழுவின் தலைவர், தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ, தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இலங்கையில் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதை இல்லாதொழிப்பதுடன் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
2030 ஆம் ஆண்டாகும் போது சகல விதத்திலும் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும் என அறிவிக்கும் இலக்குடன், தொழில் திணைக்களத்தின் www.labourdept.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் பிரகடனத்தை வழங்குவதன் முக்கியத்துவம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

