Wednesday, January 14, 2026 4:41 pm
2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் 77 வீதி விபத்துகளில் 82 பேர் பலியாகியுள்ளனர் என்று பதில் பொலிஸ் அத்தியட்சகர் (டிஐஜி) டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்டவை. கொழும்பில் ஒரு முன்னோடித் திட்டம்மாக மது அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம்செலுத்துபவர்களை அடையாளம் காண நடமாடும் போதைப்பொருள் சோதனை அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

