அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (23) USAIDஇல் பணியாற்றிய 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது அதேவேளை உலகளவில் மீதமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிர்வாக விடுப்பில் அனுப்பி வைத்தது.
இந்த நடவடிக்கையானது ஆயிரக்கணக்கான USAID ஊழியர்களை அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வருகிறது.
முன்னதாக, அமெரிக்க மாவட்ட நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் டொனால்ட்ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட மனுக்களை விசாரித்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.
நீதிமன்ற உத்தரவைத்த தொடர்ந்து, USAID ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில், பெப்ரவரி 23, 2025 முதல் இரவு 11:59 முதல், முக்கியமான செயல்பாடுகள், முக்கிய தலைமைத்துவம் அல்லது சிறப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.