Tuesday, January 20, 2026 9:48 pm
இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி வாரியத்தை ஏற்படுத்த போவதாக அறிவித்திருந்தார் ட்ரம்ப் . அதோடு, அதற்கு நான்தான் தலைவர் என சொல்லிக் கொண்டார். மேலும், காஸா அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
ஆனால் காஸா அமைதி வாரியத்தில் இணைய மாட்டோம் என பிரான்ஸ் ஜனாதிஅப்தி மேக்ரான் அறிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ட்ரம்ப் ‘காஸா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால் அந்நாட்டிற்கு 200 சதவீத வரி விதிப்பேன்’ என மிரட்டியிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகளவான வைன் ன் ஏற்றுமதி ஆகிறது. எனவே அமெரிக்கா அதிக வரி விதித்தால் இது பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிற நிலையில் விரைவிலேயே பிரான்ஸ் வாரியத்தில் சேர்ந்துவிடும் என சொல்லப்படுகிறது.

