கார் விபத்தில் மரணமான டியோகோ ஜோட்டாவின் நினைவாக 20வது இலக்க சீருடைக்கு . லிவர்பூல் அணி ஓய்வு கொடுத்தது. சீருடை இலக்கத்துக்கு லிவபூல் ஓய்வு கொடுப்பது இதுவே முதன் முறையாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் லிவபூல் அணியின் வெற்றிகளுக்கு எங்கள் போத்துகல் வீரரான ஜோட்டா அளவிட முடியாத பங்களிப்பை வழங்கி உள்ளார் என்று கிளப் கூறியது.
ஜூலை 3 ஆம் திகதி வடக்கு ஸ்பெயினில் நடந்த விபத்தில் புதிதாகத் திருமணமான ஜோட்டா தனது சகோதரருடன் சேர்ந்து கார் விபத்தில் மரணமானார்.
வெள்ளிக்கிழமை ஆன்ஃபீல்டுக்கு வெளியே ஒரு பெரிய நினைவுச்சின்னத்தில் ஜோட்டாவின் மனைவி ரூட் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் லிவர்பூல் அணி வீரர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர்
