Saturday, February 14, 2026 7:56 am
மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் ல் இடம் பெற்ற ‘வீர ராஜ வீரர்’ என்கிற பாடல் தன்னுடைய தந்தை நசீர் பயாசுதீன் தாகர் ,தனது மாமா ஜாகிருதீன் தாகர் ஆகியோர் இணைந்து இசையமைத்த சிவ ஸ்துதி பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஹிந்துஸ்தானி பாடகர் பையாஸ் வசிபுதத்தீன் தாகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.. ஆனால் அதை எதிர்த்து பாடகர் பையாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏஆர் ரஹ்மான் 2 கோடி ரூபா செலுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
இசையில் முந்தைய ‛தாகர்வாணி’ பாரம்பரியத்தின் பங்களிப்பை ஏஆர் ரஹ்மான் அங்கீகரிக்க வேண்டும். இது சக கலைஞர்களுக்கு இடையேயான சண்டை இல்லை. தொழில்முறை இசைக்கலைஞர்களான மரியாதையும் அங்கீகாரமும் மட்டுமே தேவை. இந்த மாதிரியான இசை குடும்பங்கள் பங்களிக்கவில்லை என்றால் இன்றைய நவீன பாடகர்கள் இவ்வளவு தூரம் சாதித்து இருக்க முடியுமா? பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு மேலும் இந்த பாடல் சிவா ஸ்துதியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை ஏஆர் ரஹ்மான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதோடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிமன்றத்தின் இன்றைய கருத்து தொடர்பாக அன்றைய தினம் ஏஆர் ரஹ்மான் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளார்..

