Thursday, February 12, 2026 4:53 pm
ரி20 உலகக் கிண்ணப் குரூப் பி பிரிவு போட்டியில் இலங்கையும், ஓமானும் இன்று மோதின.இலங்கை அணி கேப்டன் தசன் சனக்கா 5 சிக்சர்கள் விளாசி 19 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
ரி0 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்த இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
போட்டியின் போது இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் ஓமான் வீரர் சுபியான் முஹம்மது உடன் மோதலில் ஈடுபட்டார்.
அப்போது ஓமான் அணி கப்டன் ஜெட்டந்தர் உடனடியாக இரண்டு வீரர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். குசல் மெண்டிசை கோபப்படுத்தும் வார்த்தையை சூபியான் முஹம்மத் பயன்படுத்தியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

