Friday, February 13, 2026 10:05 am
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான (பிஎன்பி),நேற்று(12) நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி ஈட்டியது.
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
நேற்று நடைபெற்ற இந்த 13-வது பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் BNP கூட்டணி 213 தொகுதிகளில் இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் தான் போட்டியிட்ட போக்ரா ,டாக்கா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வெறும் 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவை சந்தித்தது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதால், அக்கட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை.

