Wednesday, December 24, 2025 10:14 am
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட பத்து பேர் போதைப் பொருட்களுடன் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும், போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும், கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் மேடலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

