Friday, January 30, 2026 7:02 am
கடைசி பணயக்கைதியின் எச்சங்களை மீட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு காஸாவில் நடந்த போரின் போது கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் 15 உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்தியஸ்தர்கள் வழி வகுக்கும் என்று நம்புகின்றனர்.
ஒக்டோபர் மாதம் இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது, 48 பணயக்கைதிகள் காஸாவில் இருந்தனர், அவர்களில் க்விலி உட்பட 28 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
மீதமுள்ள உயிருள்ள , இறந்த பணயக்கைதிகளை ஒப்படைப்பது என்பது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் எழுதப்பட்ட ஒரு முக்கிய உறுதிமொழியாகும். ஹமாஸ் ஆயுதக் குறைப்பு உட்பட அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதில் ஆழமான பிளவுகளுடன், அடுத்தடுத்த கட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இஸ்ரேல் க்விலியின் உடல்களை மீட்டெடுத்த பிறகு, இறந்த 15 பாலஸ்தீனியர்களை காஸாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்வதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், கூறியது.

