பிரான்சின் குடும்ப நல நிதி ஆணையம் (CAF), ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை வழங்கக்கூடிய ஒரு புதிய உதவித்தொகையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த உதவித்தொகை எந்தெந்த குடும்பங்களுக்குக் கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை, இந்த உதவித்தொகை பெரிய குடும்பங்களுக்கு (familles nombreuses) மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதாவது, ஒரு குடும்பத்தில் இரண்டாவது குழந்தையிலிருந்து இந்தத் தொகை அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், இந்த விதியில் தற்போது முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
புதிய திட்டத்தின்படி, குடும்பங்கள் தங்கள் முதல் குழந்தைக்கே இந்த உதவித்தொகையைப் பெற முடியும். ஏற்கனவே இந்த உதவித்தொகையைப் பெற்று வருபவர்களுக்கும் இது கூடுதல் பலனை அளிக்கும் என்றும், அவர்கள் பெறும் மொத்தத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ‘Le journal de l’Economie’ (பொருளாதார நாளிதழ்) குறிப்பிட்டுள்ளது. இந்த உதவித்தொகையானது, ஒரு குடும்பத்தின் வருமானத்தைப் பொறுத்து, மாதத்திற்கு 19 முதல் 75 யூரோக்கள் வரை (ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை) மாறுபடும்.