அமெரிக்க வெளியுறவுத் துறையை மறுவடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 1,300க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் ஆகியோரை பணி நீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.
வெளியுறவுத் துறையில் பணிபுரியும் 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை அதிகாரிகளும் வரும் மாதங்களில் தங்கள் பதவிகளை இழப்பார்கள்.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு சேவை அதிகாரிகள் முறையான பணிநீக்கத்திற்கு முன் 120 நாட்களுக்கு நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு 60 நாள் பிரிவினைக் காலம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.