Wednesday, April 9, 2025 8:51 am
தேர்தல் சட்டங்களை மீறியதற்காக மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 அரசியல் கட்சி ஆதரவாளர்களைக் கைது செய்த பொலிஸார் 11 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏப்ரல் 8 ஆம் திகதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி காலை 6 மணி வரை, ஒரு வன்முறை சம்பவமும் 12 தேர்தல் சட்ட மீறல்களும் பதிவாகியுள்ளன.
மார்ச் தொடக்கத்தில் இருந்து மொத்தம் 24 வன்முறை சம்பவங்களும் 99 தேர்தல் சட்ட மீறல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

