ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகளால் ஒரே இரவில் சுமார் 120 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
“கடந்த இரவு ஆகஸ்ட் 9 ஆம் திகதி இரவு 20:00 மணி (1700 GMT) முதல் ஆகஸ்ட் 10 ஆம் திகதி மாஸ்கோ நேரப்படி 06:10 மணி (0310 GMT) வரை, வான் பாதுகாப்புப் படையினர் 121 நிலையான இறக்கைகள் கொண்ட உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்களை அழித்து இடைமறித்தனர்” என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி (0530 GMT) முதல் பிற்பகல் 3 மணி (1200 GMT) வரை 34க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமைச்சு மேலும் கூறியது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை 100 போர் , ஏமாற்று ட்ரோன்களைப் பயன்படுத்தி ஒரே இரவில் ரஷ்யா தாக்குதலை நடத்தியதாகவும், அவற்றில் 70 ட்ரோன்களை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்தது.