Thursday, January 29, 2026 4:56 pm
ஃபார்முலா 1 ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர் (Michael Schumacher) 12 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு ஆல்ப்ஸ் பனி மலைப்பகுதியில், பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால், மூளைப் பாதிப்பு ஏற்பட்டு, படுக்கையில் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோமாவில் இருந்து வெளியே வந்த ஷூமேக்கர், தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் மேஜோர்காவில் உள்ள ஜெனிவா ஏரி அருகிலுள்ள 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இல்லத்தில் அவர் தற்போது சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறார்.ஷூமேக்கரின் உடல்நிலை 12 ஆண்டுகளாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்களுக்கு மட்டுமே அது தெரியும். அவரது 30 ஆண்டுகால மனைவி கொரினா, 24 மணி நேர செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் குழுவுடன் கவனித்து வருகிறார்.
ஜேர்மனியை சேர்ந்த ஷூமேக்கர், பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 7 முறை உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 57 வயதான ஷூமேக்கர், இதுவரை 91 ஃபார்முலா ஓன் பந்தயங்களையும், 155 முறை பந்தயத்தில் முதல் 3 இடத்தையும் பிடித்துள்ளார். Pole position எனப்படும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து, பந்தயத்தை இதுவரை 68 முறை முதல் இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் வெளியான F1 திரைப்படத்தில் கூட ஹீரோ பிராட் பிட், மைக்கேல் ஷூமேக்கர் காலத்தில், அவருக்கு சக போட்டியாளராக இருந்தார் என்ற வசனங்கள் இடம்பெறும்.

