Saturday, January 31, 2026 2:59 pm
திருகோணமலை கல்லடிச்சேனை கடலோரப் பகுதியில் ஜனவரி 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது 117 ஆமை முட்டைகளை வைத்திருந்த தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும் கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

