அஹதமாபாத் விமான விபத்துக்குப் பின்னர் 112 ஏர் இந்தியா விமானிகள் நோய்வாய்ப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியது.
மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல், பெருமளவில் அறிக்கையிடும் போக்கு இல்லை என்றாலும், ஜூன் 16 அன்று நோய் காரணமாக விடுப்புகளில் சிறிது அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது. இதில் 51 கமேண்டர்கள், 61 முதல் அதிகாரிகள் விடுப்பு எடுத்தனர் என்றார்.
விமான ஊழியர்களின் மன ஆரோக்கியம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மருத்துவ மதிப்பீடுகளின் போது மனநல மதிப்பீடுகளை செயல்படுத்த விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (DGCA) பிப்ரவரி 2023 இல் உத்தரவுகளை பிறப்பித்தது.