உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய விழா நேற்று (05) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் பயனாளிகளுக்கு 1000 வீடுகள் கையளிக்கப்பட்டன. நடைபெற்றது.
சொந்தமாக வீடு கட்ட நிதி வசதி இல்லாத சுமார் 4,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்படும் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டி முடிக்கப்பட்ட 1,000 வீடுகள், நிகழ்வின் போது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதியால் அதிகாரப்பூர்வமாக பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
உலக குடியிருப்பு தினத்தைக் குறிக்கும் வகையில், இந்த நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட நாடளாவிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், நகர அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.
இதேவேளை, உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் படைப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியையும், வீட்டுத் திட்டமிடல் தொடர்பான வடிவமைப்புக் கருத்துக்களின் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.