Monday, October 26, 2026 4:47 pm
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூப முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து அவர் மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர்
இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

