இலண்டன் ஹீத்ரோ விமான நிலயத்துக்கு அருகிலுள்ள மின்சார துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தைத் தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும்.
இதனால் சுமார் 1,357 விமானங்கள் பாதிக்கப்படும் என்று மதிப்பிட்டுள்ளது பயணிகள் விமான நிலையத்திலிருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், ஹீத்ரோவுக்கான அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரோ, கடந்த ஆண்டு 83.9 மில்லியன் பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
விமான நிலையத்தின் வடக்கே உள்ள ஹேய்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலுள்ள சுமார் 16,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.