இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹிஸ்புலாத் தலைவர்களான ஹசன் நஸ்ரல்லா , ஹஷேம் சஃபீடின் ஆகியோரின் இறுதிச் சடங்கிற்காக பல்லாயிரக் கணக்கானோர் கூடியபோது லெபனான் தலைநகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறந்தன.
சாமவுன் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடந்த விழாவில் ஈரான் உட்பட 70 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக லெபனான் ஒளிபரப்பாளர் அல்-ஜதீத் தெரிவித்தார்.
“ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கின் போது பெய்ரூட்டில் பறக்கும் இஸ்ரேலிய விமானப்படை ஜெட் விமானங்கள் தெளிவான செய்தியை அனுப்புகின்றன: இஸ்ரேலை அழிக்க அச்சுறுத்துபவர்களும் இஸ்ரேலைத் தாக்குபவர்களும் – இதுதான் அவர்களின் தலைவிதி” என்று காட்ஸ் அறிக்கையில் தெரிவித்தார்.
நஸ்ரல்லாவிட் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பெய்ரூட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தெற்கு லெபனானில் உள்ள சொந்த ஊரில் சஃபீடின் ஜனாசா அடக்கம் செய்யப்பட்டது.
இரகசிய்மான இடங்களில்தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டது