சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேமில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேடன் எம்எஸ் டோனி அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களின் பட்டியலில் டோனியும் இணைகிறார்.
தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஹாஷிம் ஆம்லா, நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ,அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் ஆகியோரும் இதில் அடங்குவர்.
ஐசிசி தனது அறிக்கையில், “ஆட்டத்தின் மிகச்சிறந்த பினிஷர், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்களில் ஒருவராக அவரது மரபு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.