இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் 71 வயதில் காலமானார்.
புளோரிடாவின் கிளியர்வாட்டரில் உள்ள அவரது வீட்டில் அவசர சேவை ஊழியர்கள் ஹோகனுக்கு மாரடைப்புக்காக சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
டெர்ரி பொலியா என்ற இயற்பெயர் கொண்ட ஹோகன், WWE இன் ஐந்து தசாப்த கால வரலாற்றில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாவார். அவரது தனித்துவமான பொன்னிற மீசை ,வண்ணமயமான தலைக்கவசங்கள் அவரின் அடையாளங்களாகும்.
1985 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ரெஸில்மேனியா போட்டியின் முக்கிய போட்டியாளராக ஹோகன் இருந்தார், ஆண்ட்ரே தி ஜெயண்ட் , ராண்டி சாவேஜ் முதல் தி ராக் வரை அனைவரையும் எதிர்கொண்டார்.
1984 ஆம் ஆண்டு அயர்ன் ஷேக்கை தோற்கடித்து தனது முதல் WWE உலக சம்பியன்ஷிப்பை வென்றார்.
ஹோகன் ஐந்து உலக சம்பியன்ஷிப்களை வென்றார். 2005 ஆம் ஆண்டில் சில்வெஸ்டர் ஸ்டலோனால் WWE ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் .