அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸுக்கு “கடைசி எச்சரிக்கை” விடுத்துள்ளார்.
பாலஸ்தீன குழுவிடம் காசாவில் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது ” நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று பாலஸ்தீனப் பகுதியில் பணயக்கைதிகள் வைத்திருப்பது குறித்து அமெரிக்கா குழுவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ட்ரம்பின் எதிர்வினை வந்தது.
இந்த பேச்சு வார்த்தையை வெள்ளை மாளிகையும் பின்னர் உறுதி செய்தது.
சமீப காலம் வரை, அமெரிக்கா ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து வந்தது.
1997இல் ஹமாஸை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.