ஸ்பெயினின் வலென்சியாவில் நடந்த போர்ஷே ஸ்பிரிண்ட் சேலஞ்ஜ் கார் பந்தயத்தின்போது நடிகர் அஜித்தின் கார் விபத்த்க்குள்ளாகியது. அவர் காயம் இன்றி தப்பினார்.
போத்துகல் , துபாய் ஆகிய நாடுகளின் நடந்த விபத்தின் பின்னர் மூன்றாவது முறை அவரது கார் விபத்துக்குள்ளானது இரண்டு மாதங்களில் இது அவரது மூன்றாவது விபதாக்கும்.
அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா இதுகுறித்து பகிர்ந்துள்ள வீடியோவில், நடிகர் அஜித்தின் வாகனம் மற்ற கார்களுடன் மோதியதால் இரண்டு முறை விபத்துக்குள்ளானதைக் காட்டுகிறது.
5வது சுற்றில் அஜித் சிறப்பாக செயல்பட்டு 14வது இடத்தைப் பிடித்ததாகவும், ஆனால் 6வது சுற்றில் துரதிர்ஷ்டவசமாக இரண்டு முறை விபத்துக்குள்ளானதாகவும் சுரேஷ் சந்திரா கூறினார்.