Wednesday, January 14, 2026 7:39 am
எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தனது தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எடைபோட்டு வருவதால், இந்த வாரம்வொஷிங்டனுக்கு ஒரு தூதரை அனுப்ப வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டமிட்டுள்ளார் என்று செவ்வாயன்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்காஅ வெனிசுலா தூதரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பெலிக்ஸ் பிளாசென்சியா, ரோட்ரிகஸின் உத்தரவின் பேரில் வாஷிங்டனில் அமெரிக்க மூத்த அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக, திட்டங்களை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.

