நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை சீர்செய்து மீண்டும் பிரதான மின்வலயத்துடன் இணைக்கும் வரை குறைந்தது பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இலங்கையின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நிலக்கரி மின்நிலையத்தை விரைவில் சரிசெய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், ஆனால் இந்த வாரம் முழுவதும் மின்வெட்டு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.
இலங்கையின் பல மாவட்டங்களில் மின்சார சபை ஏற்கனவே ஒரு மணித்தியாலம் 30 நிமிட மின்வெட்டை அமுல்படுத்தியுள்ளது. ஆனால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுவதால், இந்த நேரங்கள் குறையும். எவ்வாறாயினும், ஆலையை மீண்டும் இணைக்க குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் தேவை என்று மின்சாரசபை வட்டாரங்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.