லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோவை எத்ர்த்து விளையாடிய டெல்லி 8 விக்கெற்களால் வெற்றி பெற்றது.கடந்த முறை போல, மீண்டும் நாணயச் சுழற்சியில் ‘ வென்ற டில்லி அணி கப்டன் அக்சர் படேல், வழக்கம் போல துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 6 விக்கெற்களை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது. 17.5 ஓவர்களில் 2 விக்கெற்களை இழந்த டில்லி 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ அணிக்கு மார்க்ரம், மிட்சல் மார்ஷ் ஜோடி துவக்கம் கொடுத்தது.
லக்னோ அணி 9 ஓவரில் விக்கெற் இழப்பின்றி 82 ஓட்டங்கள் எடுத்தது. சமீரா பந்தில் மார்க்ரம் 52, அ பூரன் 9, அப்துல் சமத் 2 , மிட்சல் மார்ஷ் 45 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.
20 வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இதன் முதல் மூன்று பந்தில் படோனி ‘ஹட்ரிக்’ பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் படோனி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷாப்பை, கடைசி பந்தில் ‘டக்’ அவுட்டானார்.
லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மட்டும் எடுத்தது. டில்லி சார்பில் முகேஷ் குமார் 4 விக்கெற்களை சாய்த்தார்.
160 வெற்றி இலக்குடன் டெல்லி களம் இறங்கியது. டில்லி அணிக்கு அபிஷேக் போரல், கருண் நாயர் ஜோடி துவக்கம் கொடுத்தது. கருண் நாயர் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிஷ்னோய் பந்தை சிக்சருக்கு விரட்டிய அபிஷேக், 34 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 51 ஓட்டங்கள் எடுத்தபோது மார்க்ரம் சுழலில் அவுட்டானார்.
ராகுல், அபிஷேக் இணைந்து வேகமான ரன் குவிப்பை வெளிப்படுத்தியது. அக்சர் படேல், பிஷ்னோய் பந்துகளில் மாறி மாறி சிக்சர் அடிக்க, வெற்றியை வேகமாக நெருங்கியது டில்லி அணி. கடைசியில் ராகுல் சிக்சர் அடிக்க, டில்லி அணி 17.5 ஓவர்களி 2 விக்கெற்களை இழந்து 161 ஓட்டங்கள் எடுத்ததுடில்லி மீண்டும் லக்னோவை வீழ்த்தியது. அரைசதம் அடித்த ராகுல் (57), அக்சர் படேல் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடந்த சீசனில் அணி உரிமையாளருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக லக்னோ கேப்டன் ராகுல், அணியில் இருந்து வெளியேறினார். ஏலத்தில் டில்லி அணிக்கு சென்றார். விசாகப்பட்டனத்தில் இரு அணிகள் மோதிய போட்டி கடந்த மார்ச் 24ல் நடந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் ராகுல் பங்கேற்கவில்லை. நேற்று முதன் முறையாக, லக்னோ அணியை எதிர்த்து ராகுல் களமிறங்கினார்.
இரண்டாவது ‘ஸ்பின்னர்’
நடப்பு பிரிமியர் தொடரில் ‘பவர்பிளே’ ஓவருக்குள் (முதல் 6), மூன்று ஓவர்கள் பந்து வீசிய இரண்டாவது ஸ்பின்னர் ஆனார் டில்லி அணியின் அக்சர் படேல். இதற்கு முன் ஐதராபாத் அணிக்கு எதிராக தீக்சனா, இதுபோல பந்து வீசி இருந்தார்.
- இதேபோல முதல் 7 ஓவருக்குள் தனது 4 ஓவரை வீசி முடித்த இரண்டாவது ஸ்பின்னர் அக்சர் படேல். இதற்கு முன் 2015ல் ஷாபாஸ் நதீம் 4 ஓவர் வீசி இருந்தார்.
ஆறாவது அரைசதம்
லக்னோ அணி, நேற்று முதல் 6 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 51 ஓட்டங்கள் எடுத்தது. இத்தொடரில் ‘பவர் பிளே’ ஓவருக்குள் ஆறாவது முறையாக (9 போட்டி) இதுபோல 50 அல்லது அதற்கும் மேல் ஓட்டங்கள் எடுத்தது லக்னோ.
5 பந்து, 5 ஓட்டங்கள்
பிரிமியர் தொடரில் சிக்சர் மழை பொழிகிறார் நிக்கோலஸ் பூரன். ஆனால் டில்லி அணியின் மிட்சல் ஸ்டார்க்கிற்கு எதிராக தொடர்ந்து தடுமாறுகிறார். இவரது 5 பந்தில் ஓட்டங்கள் மட்டும் எடுத்த பூரன், மூன்று முறை அவுட்டாகியுள்ளார். தவிர ‘ரி-20’ல் 6 இன்னிங்சில் 4 முறை பூரனை, ஸ்டார்க் அவுட்டாக்கியுள்ளார்.
113 இன்னிங்சிற்குப் பின்
லக்னோ அணி கப்டன் ரிஷாப் பன்ட், அறிமுக சீசனில் (2016) 2 முறை 7வது வீரராக களமிறங்கினார். அடுத்து 113 இன்னிங்சிற்குப் பின், நேற்று 7வது வீரராக வந்தார்.