Wednesday, January 7, 2026 5:56 pm
வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், கியூப ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல் இருவரும் துக்க நாட்கள் அறிவித்துள்ளனர்.அமெரிக்காவின் நடவடைக்கையால் கொல்லப்பட்ட 32 ராணுவ வீரர்களுக்கு கியூபாவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.
கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மாவும், “மரியாதை மகிமை!” என்ற தலைப்புடன் வீழ்ந்த ராணுவ வீரர்களின் படங்களை வெளியிட்டது.
“வெனிசுலாவைப் பாதுகாத்து, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பாதுகாத்து, தங்கள் உயிரைத் தியாகம் செய்து இறந்த இளைஞர்களையும் பெண்களையும்” கௌரவிக்கும் வகையில், வெனிசுலா ஏழு நாள் துக்க தினத்தை அனுசரிக்கும் என ரோட்ரிக்ஸ் அறிவித்தார்.

