சவூதி விஷன் 2030 இன் நோக்கங்களுக்கு இணங்க, பல்வேறு வகை விஸாக்களை வைத்திருப்பவர்கள் இப்போது ராஜ்ஜியத்தில் தங்கியிருக்கும் போது உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
“பல்வேறு வகையான விஸாக்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் ராஜ்ஜியத்தில் தங்கியிருக்கும் போது உம்ரா செய்யலாம்” என்று ஹஜ் ,உம்ரா அமைச்சு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட மற்றும் குடும்ப வருகை விஸாக்கள், மின்னணு சுற்றுலா விஸாக்கள், போக்குவரத்து அல்லது நிறுத்த விஸாக்கள், பணி அனுமதிகள் , உம்ரா செய்ய மக்காவிற்குச் செல்லக்கூடிய பிற வகைகள் உட்பட பல வகை விஸாக்கள் இதில் அடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் வருகையை எளிதாக்குவதற்கும், அவர்கள் தங்கள் மதக் கடமைகளை ஆறுதலுடனும் மன அமைதியுடனும் செய்ய உதவுவதற்கும் ராஜ்ஜியத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு மேலும் கூறியது.