பெண்கள் விளையாட்டில் திருநங்கைகளைத் தடை செய்யும் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாட்கள் ,வாரங்களில் ஏராளமான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார், அதில் மூன்று உத்தரவுகள் திருநங்கைகளை குறிவைத்துள்ளன.
பிறக்கும்போதே உயிரியல் ரீதியாக ஆணாக நியமிக்கப்பட்டவர்கள், பள்ளி உட்பட சில விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
“பெண்கள் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைத்தல்” என்று தலைப்பிடப்பட்ட இந்த உத்தரவு, பெண்களுக்கான ஒற்றை பாலின விளையாட்டுகள் , ஒற்றை பாலின உடை மாற்றும் அறைகளை மறுக்கும் பள்ளிகள் மற்றும் தடகள சங்கங்களுக்கு எதிராக”உடனயாக அமுலாக்கப்படும்.
அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக் ,உலகக் கிண்ணப் போட்டிகளிலும் திருநங்கை விளையாட்டு வீரர்களை போட்டியிட அனுமதிக்க மாட்டேன்.”பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது. இனிமேல் பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே இருக்கும்” என்று ட்ரம்ப் கூறினார்.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை